வந்தாரை வாழவைக்கும் தமிழினம், சேர்ந்தாரை செம்மையாக்க தவறியதும் இல்லை என்று சொன்னால் அது மிகையாகாது. உலகமயமாக்கல் மற்றும் மென்பொருள் வேலைவாய்ப்புகள் அதிகமானதால் குறிப்பாக தமிழகத்திலிருந்து அதிகமாக மேற்கேத்திய நாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்கள் அதிகம். இந்தியாவில் இருந்து அதிக திறமையான வல்லுநர்களாக அல்லது மருத்துவராக வந்து பல்வேறு பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் அல்லது தேசிய சுகாதார சேவையில் இணைந்து பணியாற்றி வந்த காலகட்டத்தில் ஆங்காங்கே உள்ள தமிழ் குடும்பங்களை ஒன்றாக இணைக்க, வார்விக்ஷயரில் தாய்த்தமிழ் சங்கம் 2014ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
தமிழ் கலாச்சாரத்தின் செழுமை அதன் திருவிழாக்கள், உணவு மற்றும் தமிழ் மொழி மூலம் அனைவருடனும் பேசி மகிழ்வதுதான். இந்த வாய்ப்பை பெறுவதற்க்கான உன்னத தளமே தாய்த்தமிழ் சங்கம். தாய்த்தமிழ் ஒரு இலாப நோக்கற்ற சமூக அமைப்பாகும், இது தன்னார்வலர்களால் நடத்தப்பட்டு வருகிறது. வார்விக்ஷயர் நகர சபையில் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. வெவ்வேறு பின்புலம், தொழில், சமூக மற்றும் பொருளாதார வேறுபாடு இருந்தும், தமிழால் ஒன்றுபட்டு வாழ முனைவதாக எண்ணுவதுதான் தமிழர்களின் ஒரு பெரிய பலம். இதற்கு ஆங்காங்கே பகுதிவாரியாக இயங்கி வரும் தமிழ் மன்றங்கள் மற்றும் சங்கங்களே சான்று. தாய்த்தமிழ் சங்கமமும் இப்படியாக தோன்றிய ஒன்றுதான்.
தாய்த்தமிழ் சங்கத்தின் முதன்மை குறிக்கோள்
வயது, பாலினம், இனம், ஜாதி, மதம், மற்றும் அரசியல் பற்றுதல் பாகுபாடின்றி சங்க அன்பர்கள் மற்றும் வாரிக்க்ஷயர் வாழ் தமிழ் சமூகத்தினரின் வாழ்வு மேன்பாடு,கல்வி மற்றும் கலாசார கூறுகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்வது.
தாய்த்தமிழ் சங்கதின் நோக்கங்கள்
- தமிழ் மொழி, கலாச்சாரம் மற்றும் தொன்மை புரியவைத்து பற்றுதலை பேணுவது. . தமிழ் மொழி, கலை, சமையல் மற்றும் பிற கலாச்சார / வாழ்க்கைத் திறன்களைக் கற்க வாய்ப்புகளை வழங்குவது.
- அடுத்த தலைமுறைக்கும், வாரிக்க்ஷயர் சமூகத்தினரிடையே தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் மேன்மையை எடுத்துரைப்பது.
- சமூக ஒருங்கிணைப்பு நோக்கி செயல்படுவது.
- நம் சமூகத்தின் முகமாக இருப்பதற்கும், உள்ளூர் அரசாங்கத்திற்கு ஒரு கூட்டுக்குரலாக இருப்பது
- கல்வி, கலாச்சரம், பொதுநலம், நோயின்மை உள்பட பல சமூக மேம்பாடிற்கு உதவுவது.
மரு.மு .சௌந்தரராஜன், மரு.சௌ.மல்லிகா மற்றும் திரு. செலின் ஜார்ஜ் ஆகியோரின் வாழ்த்துடன், தாய்த்தமிழ் சங்கம் கடந்த 2014 ஆம் ஆண்டு திரு.இராசு சண்முகம் என்பவரால் நிறுவப்பட்டது. இந்த முயற்சியை இணை நிறுவனர்களான தெய்வத்திரு.குழந்தைவேல் பாலசுப்ரமணியம், திரு.வசந்த் சுப்பையா, திரு.மது முருகேசன், திரு.செபாஸ்டியன் கில்பர்ட் ராஜா, மற்றும் ஸ்ரீமதி. கீதா நடராஜன் அவர்கள் மனதார வரவேற்று பூரண ஆதரவை அளித்தனர்.
சங்கத்தின் உன்னத இலக்குகளுக்கு, உங்கள் மதிப்புமிக்க பங்களிப்பை வழங்குவதற்காக உங்களை ஆவலுடன் வரவேற்கிறோம். இந்த பயணத்தின் போது உதவிய அனைத்து தமிழ் குடும்பங்களுக்கும் & நண்பர்களுக்கும் தாய்த்தமிழின் நன்றியினை உரித்தாக்குகிறோம். குறிப்பாக, பொதுக்குழு உறுப்பினராக இருந்து உதவி புரிந்த திரு.பாலசுப்பிரமணியம், திரு.தீபக் சுப்பிரமணியம், திரு.ஜகதீஸ் கன்னா, திரு.கார்த்திக் பழனியப்பன், திரு.குலசேகர் க்ரிஷ்ணமா, திரு.கணேசன் சுப்ரமணியன், திரு.மோகன் சுப்பிரமணி, திருமதி. உமா சந்திரசேகர், திரு அருண் அய்யாசாமி, திரு பாலா ஆறுமுகம், திரு.பிரசன்னா வேலாயுதம், திரு.ராஜ்குமார் சாமுவேல் , திரு.சந்தோஷ் ராமன், திரு.செல்வராஜ் சுப்பிரமணியம், திரு.செல்வின் ஜோஸ்,மரு. கோமதி ஸ்ரீதர், திரு.செந்தில்குமரன் பத்மநாபன்,மரு. ஸ்ரீதர் ரத்தினம், திருமதி ரூபா பிரசன்னா, திரு. ராசு பாலசுப்ரமணியம், மற்றும் திருமதி.வீனா சம்பத் ஆகிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்.
தமிழ் சமூகத்தைப் பொறுத்தவரையில் , இந்த தளம் வார்விக்ஷயரின் தமிழ் சமூக குரலாக இருக்கும் - தாய்த்தமிழ் சங்கம் உங்கள் குரலாக இருக்கும். இது தமிழர்களாகிய நம் வாழ்விற்கும் நாம் வளர்ந்த வளமான கலாச்சாரத்திற்கும் இடையிலான ஒரு பாலமாக இருக்கும். இது ஒவ்வொரு குடும்பத்திலும் மகிழ்ச்சியைக் கொண்டுவருவதற்கும், துக்க காலங்களில் நடைமுறை உதவிகளை வழங்குவதற்கும் முயற்சிக்கும்.நம் அனைத்து குடும்பங்களுக்கும் சேவை செய்ய தாய்த்தமிழ் சங்கம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் .
நிறுவனங்களைப் பொறுத்தவரையில், வார்விக்ஷயரில் உள்ள தமிழ் குடும்பங்களுக்கு தகவல்களையும் செய்திகளையும் பரப்புவதற்கு நாங்கள் உங்களுடன் இணைந்து செயல்படுவோம். சமூகத்திலிருந்து தமிழ் மொழிபெயர்ப்பாளர்களையும் சங்கம் உதவி செய்யு முடியும்.
வாழ்க தமிழ்! தமிழால் இணைவோம்!!