Name : N. Bobby Prasath
Native place : Namakkal District.
Living place : Rugby, UK
Profession : Electronics & Instrumentation Engineering
My hometown is Muthukappatti in the Kollimalai region, which was once ruled by Valvil Ori, the great King. From a young age, my life was tied to agriculture, so I have a great fondness for nature. I love bathing in the waterfall with my friends and swimming in the well.
We cultivate turmeric, sugarcane, chilli, paddy, onion, banana etc., and the joys and celebrations around harvesting it is unforgettable. Rice and fish curry are my favorite food as I lived close to the Cauvery river. It is my nature to associate good friendships with good hearted people. I am blessed with a nice family with two children.
I am passionate about our society where I live, and it is very reason for my association with ThaaiTamil Sangam (TTS). I am happy to support different skill development programs for children. Let's unite and win together.
பெயர் : ந. பாபி பிரசாத்
பூர்விகம் : நாமக்கல் மாவட்டம்
வசிப்பது : இரக்பி, வாரிக்க்ஷிர், மத்திய இங்கிலாந்து
தொழில் : மின்மின்னணுவியல் மற்றும் கருவி
கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி ஆண்டு வந்த கொல்லிமலைப் பகுதியைச் சேர்ந்த முத்துகாப்பட்டி என் சொந்த ஊர். சிறு வயதிலிருந்தே என் வாழ்க்கை விவசாயத்தோடு பிணைந்திருந்ததால் இயற்கையின் மீதும், கால்நடைகள் மீதும் மிகுந்த பற்று உண்டு. நேரம் கிடைக்கும் போதெல்லாம் நண்பர்களுடன் அருவியில் குளிப்பதும், கிணற்றில் நீச்சல் அடிப்பதும் மிகவும் பிடிக்கும். எங்களது தோட்டத்ததில் என் பெற்றோர்கள் மஞ்சள், கரும்பு, மிளகாய், நெல், வெங்காயம், வாழை, கொய்யா, கறி வேப்பிலை மற்றும் கிழங்குவகைகளை பயிரிடுவதும், அது மகசூலாகும் போது பூமித்தாயின் புன்னகையை ரசித்து மெய்சிலிர்ப்பதும் மறக்க முடியாதவை. காவிரி ஆறு அருகில் இருப்பதால் நெல்சோறும் மீன்குழம்பும்(நேத்து வச்ச) என் விருப்ப உணவு. இனிமையாகவும், வெள்ளந்தி பேச்சோடு நட்புகளுடன் உறவாடுவது என் இயல்பு. என் மனைவி பெயர் செளந்தர்யா, எனக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர்.
மண்ணை நேசிக்கும் எனக்கு, சமுதாயத்தின் மீது மிகுந்த அக்கறை உண்டு. அந்த என் எண்ணமே என்னை தாய்த்தமிழ் சங்கத்தோடு இனணத்தது. என்னால் முடிந்த அளவு குழந்தைகளுக்கான பல்வேறு திறன் ஊக்க நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய பணியாற்றுகிறேன்.
ஒன்று படுவோம் வென்றுகாட்டுவோம்.