Name : Sureshbabu Periyasamy
Native place : Kallakurichi.
Living place : Rugby, Warwickshire
Profession : Advanced Nurse Practitioner
I grew up in a
beautiful village by the bank of Gomuki river near Kallakurichi. My
childhood days were spent in a village where the primary occupation is
agriculture. I had a great experience of our culture, tradition and
farming. I studied in the Tamil medium in a government school with great
enthusiasm and affinity towards the Tamil language.
I love spending time with family and friends and make them smile &
laugh. I love games, travel and watching movies. I am proud to be part
of ThaaiTamil Sangam (TTS) in the journey of taking our language and
culture to our next generation.
பெயர் : சுரேஷ்பாபு பெரியசாமி
பூர்விகம் : கள்ளக்குறிச்சி
வசிப்பது : இரக்பி
தொழில் : செவிலியர்
நான் பிறந்தது
வளர்ந்தது கள்ளக்குறிச்சிக்கு அருகில் உள்ள ஒரு அழகிய கிராமத்தில் தான்.
கள்ளக்குறிச்சி ஒரு விவசாய மாவட்டம் என்பதால் சிறுவயது முதல் நமது
மண்சார்ந்த விடயங்கள், பண்பாடு & கலாச்சாரம் என்னவென்று அறிந்து
வளரும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. ஆற்றங்கரையில் பள்ளி, ஆலமரத்தில்
ஊஞ்சல் , கிணற்றங்கரையில் குளியல் போன்ற பால்ய நினைவுகள் இன்னும் என்
மனத்தில் நீங்கா நினைவாக இருக்கிறது. சிறுவயது முதல் நண்பர்களுடன்
சந்தோஷமாக இருப்பதும் மற்றவர்களை கலகலப்பாக சந்தோஷப்படுத்துவதும் என்னுடைய
குணம். விளையாட்டு, பயணம் மற்றும் சினிமா பார்ப்பது என்னுடைய
பொழுதுபோக்கு. தாய்த்தமிழ் சங்கத்தில் இணைந்து தமிழர் பண்பாடு மற்றும்
கலாச்சாரத்தினை நம்முடைய அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லும் பணியில் நானும்
ஒருவன் என்பதில் பெருமை அடைகிறேன்.