Mathu Murugesan

Name : Mathu Murugesan
Native place : Nagercoil.
Resident of : Rugby, Warwickshire, UK
Profession : Mental Health Nursing
Originally hailing from Nagercoil, I have always held a deep admiration for individuals with an optimistic outlook on life. During my initial period in Manchester, I realized the importance of being surrounded by a supportive community. Upon relocating to the Midlands, my thoughts turned towards creating a platform that would facilitate the gathering of families and friends, thus nurturing shared values that would serve as a valuable asset for future generations. It was at this juncture that I became acquainted with like-minded individuals who shared my vision, and we banded together to establish ThaaiTamil Sangam (TTS), with the aim of fostering a sense of community among Tamil families and friends residing in Warwickshire and beyond. I relish the lively feasts and spirited banter that are an integral part of TTS events, and I am delighted to be an integral part of the TTS team. I am an individual who is always eager to learn new skills, be it related to technology or the mechanics of unscrewing a bolt. My proclivity for keeping busy is matched by my desire to support those in my immediate circle of family and friends.

பெயர் : மது முருகேசன்
பூர்விகம் : நாகர்கோவில்
வசிப்பது :
இரக்பி, வாரிக்க்ஷிர், மத்திய இங்கிலாந்து
தொழில் : செவிலியர்

நான் நாகர்கோயிலிலிருந்து வந்தவன், எப்போதும் தன்னம்பிக்கை உள்ள மக்களை விருப்புவேன். நான் ஆரம்பத்தில் மான்செஸ்டரில் இருந்தபோது நம் சமூகத்துடன் சூழ்ந்து இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை எனக்குக் கற்பித்தது. வாரிக்க்ஷிர் வந்த பின்பு நம் எதிர்கால தலைமுறையினருக்கு பயனளிக்கும் விதமாக, குடும்பங்களையும் நண்பர்களையும் ஒன்று சேர்ப்பதற்கான ஒரு தளத்தை எப்போது செய்வோம் என்ற எண்ணங்கள் என் மன ஓட்டத்தில் இருந்தது. நமக்கான தளத்தை வைத்திருக்க வேண்டும் என்ற கனவை நனவாக்க சில நண்பர்களுக்கு நான் அறிமுகப்படுத்தப்பட்ட நேரம் அது. வார்விக்ஷயரிலும் அதற்கு அப்பாலும் தமிழ் குடும்பங்களையும், நண்பர்களையும் ஒன்றிணைக்க தாய்த்தமிழ் சங்கம் என்ற அமைப்பு கிடைக்கப்பெற்றது மகிழ்ச்சியே . ஒவ்வொரு நிகழ்விலும் விருந்தோம்பலையும் மற்றும் குதூகல கொண்டாட்டமும் எனக்கு மிகவும் பிடிக்கும். தாய்தமிழ் அணியின் ஒரு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒரு சில விடயங்களில் முன் அனுபவம் இல்லாமல் இருந்தாலும் , எல்லாவற்றையும் முயற்சிக்க விரும்புகிறேன். நான் எப்போதும் ஏதோ ஒரு வேலையில் இருப்பதாகவே உணர்கிறேன். என்னைச் சுற்றியுள்ள குடும்பங்களுக்கும் நண்பர்களுக்கும் என்னால் முடிந்தவரை உதவி செய்ய முயற்சி செய்கிறேன். வளமுடன் வாழ்வோம் !