Name : Senthilkumar Muthusamy
Native place : Thiruchengodu
Living place : : Rugby, Warwickshire, UK
Profession : Aeronautical Engineering
The town where I was
born and raised is Tiruchengode, popular for Arthanarisuvar. which
explains the philosophy that men and women are equal. It is a lovely
place surrounded by mountains with beautiful landscapes, where many
families earn their bread from power looms and spinning mills.
I loved mountain and tree climbing with friends at a young age. I always
had great curiosity to know the biographies of renowned personalities. I
am happily living life with wife and two children. My love for
“Kaarakuzhambu” is next only to my Mom’s love.
I like Tamil based discourses. I have joined my hands with
ThaaiTamil Sangam (TTS) purely due to my interest in participating and
contributing to some social activities along with like-minded friends.
It has always given me great pleaasure to work along with positive
people for the betterment of our next generation.
பெயர் : செந்தில்குமார் முத்துசாமி
பூர்விகம் : திருச்செங்கோடு
வசிப்பது :
இரக்பி, வாரிக்க்ஷிர், மத்திய இங்கிலாந்து
தொழில் : காற்றுஇயக்கவியல்
ஆணுக்குப் பெண் சரி
நிகர் சமானமே என்ற தத்துவத்தை விளங்க வைக்கும் அர்த்தநாரீசுவரர் உள்ள
திருச்செங்கோடு நான் பிறந்து வளர்ந்த ஊர். மலையும் மலைசார்ந்த இடம், வானம்
பார்த்த பூமிதான். விசைத்தறி கூடங்களும்,நூற்பு ஆலைகளும் நிறைய உள்ளன.
இளம் பிராயத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மலை மற்றும் மரம் ஏறுதல் மிகவும்
பிடிக்கும். தேசத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறை அறிந்து கொள்வதில் அளப்பரிய
ஆவல். என் இல்லற வாழ்வை வினோதினியோடு இணைந்து,இரு புதல்வர்களைப்பெற்று
இனிதாக நடத்துகிறேன். அன்னையின் அன்பை அடுத்து,நான் கட்டுப்படும்
விஷயங்களில் ஒன்று காரக்குழம்பு!
தமிழ் சார்ந்த சொற்பொழிவுகள் விரும்பிகேட்பேன். நண்பர்களுடன் இணைந்து
பொதுவுடமை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதும்,பங்களிப்பதுமான ஆர்வமே, என்னை
தாய்த்தமிழ் சங்கத்துடன் இணையவைத்தது.
நல்ல இதயங்களுடன் இணைந்து தமிழர்களின் அறநெறிகளையும்,பண்புகளையும் அடுத்த
தலைமுறைக்கு எடுத்து செல்ல பணியாற்றுவது, திரைகடல் தாண்டி,திரவியம் தேடும்
இடத்தில் எனக்கு கிடைத்த பெரியவாய்ப்பு.